• Blockquote

    Mauris eu wisi. Ut ante ui, aliquet neccon non, accumsan sit amet, lectus. Mauris et mauris duis sed assa id mauris.

  • Duis non justo nec auge

    Mauris eu wisi. Ut ante ui, aliquet neccon non, accumsan sit amet, lectus. Mauris et mauris duis sed assa id mauris.

  • Vicaris Vacanti Vestibulum

    Mauris eu wisi. Ut ante ui, aliquet neccon non, accumsan sit amet, lectus. Mauris et mauris duis sed assa id mauris.

  • Vicaris Vacanti Vestibulum

    Mauris eu wisi. Ut ante ui, aliquet neccon non, accumsan sit amet, lectus. Mauris et mauris duis sed assa id mauris.

  • Vicaris Vacanti Vestibulum

    Mauris eu wisi. Ut ante ui, aliquet neccon non, accumsan sit amet, lectus. Mauris et mauris duis sed assa id mauris.

சமச்சீர் கல்வி வழக்கு மேல் முறையீடு

Monday 25 July 2011 0 comments


சென்னை, ஜூலை 25: மே 22-ந்தேதி கூடிய புதிய அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறுத்திவைப்பது என்றும், பழைய பாடத்திட்டத்தை தொடர்வது என்றும் முடிவு செய்தது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதை பெற்றோர்கள், மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே சமச்சீர் கல்வி பாட திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்ட திருத்தம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்தும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், சமச்சீல் கல்வி திட்டத்தை இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்று கூறியது தமிழக அரசு. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட்டு, “தமிழக அரசு கடந்த ஆண்டு 1 மற்றும் 6-வது வகுப்புகளுக்கு தொடங்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டம் இந்த ஆண்டும் தொடர வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தொடர்வது குறித்து கல்வியாளர் குழு அமைத்து அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
ஐகோர்ட்டு தீர்ப்பின்படி தமிழக அரசு பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்று தீர்ப்பு கூறியது. அதன்படி நிபுணர்களின் அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் புதிய அரசு நிறைவேற்றிய சமச்சீர் கல்வி திருத்தச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
1 முதல் 10-வது வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் இந்த மாதம் 22-ந்தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகத்தை அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தீர்ப்பையும் எதிர்த்து தமிழக அரசு கடந்த 19-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது.
சுப்ரீம் கோர்ட்டு கடந்த 22-ந்தேதி அளித்த தீர்ப்பில், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. அடுத்த மாதம் 2-ந்தேதிக்குள் சமச்சீர் கல்வி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. பெற்றோர் ஆசிரியர்கள் தாக்கல் செய்த கேபியட் மனு மீதும் சமச்சீர் கல்வி வழக்கு மீதும் நாளை (26-ந்தேதி) விசாரணை நடைபெறும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி நாளை மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது.

எலக்ட்ரானிக் பயணச்சீட்டு:

0 comments


சென்னை, ஜூலை 21: பேருந்துகளில் அதி நவீன கையடக்க மின்னணுக் கருவி மூலம் பயணச்சீட்டுகளை வழங்கிட ஏதுவாக, முதற்கட்டமாக 5,000 மின்னணுக் கருவிகளை வாங்கிடவும், மேலும் 250 பணிமனைகள், 19 கோட்டங்கள், 6 போக்குவரத்து தலைமையகங்கள் மற்றும் சென்னையில் அமையவுள்ள மத்தியக் கட்டுப்பாட்டு அறை ஆகியவைகளுடன் இணைக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்கிடவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்களுக்கு அரசால் வழங்கப்படும் சேவைகள் துரிதமாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு புதிய திட்டங்களையும், வழிமுறைகளையும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அரசால் வழங்கப்படும் சேவைகள் காலதாமதம் இன்றி பொதுமக்களை சென்றடைவதற்கு மின் ஆளுமை மற்றும் கணினிவழி சேவைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில், வழக்கமான முறையில் அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டுகள் வழங்கும் முறைக்கு மாற்றாக, நேரடித் தொடர்புள்ள கையடக்க மின்னணு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கினால் பயணம் செய்பவருக்கு எளிதில் பயணச்சீட்டு வழங்கிட இயலும். அதே போன்று நடத்துனரின் பணியும் எளிதாகும்.
அதே சமயம், ஒவ்வொரு பேருந்துகளிலும் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் பற்றிய விவரங்கள், பணிமனைகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களுக்கு உடனடியாக தெரிய வரும்.
மேலும், பயணச்சீட்டுகள் வழங்கும் போதே உடனடியாக ஆன்லைனில் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை, பயணிகள் மேற்கொள்ளும் பயணத்தின் தூரம், பேருந்துகள் உள்ள இடம் மற்றும் பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுகிறதா என்ற விவரம் ஆகியவை போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கு உடனடியாக தெரிய ஏதுவாகும்.
எனவே, பேருந்துகளில் அதி நவீன கையடக்க மின்னணுக் கருவி மூலம் பயணச்சீட்டுகளை வழங்கிட ஏதுவாக, முதற்கட்டமாக 5,000 மின்னணுக் கருவிகளை வாங்கிடவும், மேலும், 250 பணிமனைகள், 19 கோட்டங்கள், 6 போக்குவரத்து தலைமையகங்கள் மற்றும் சென்னையில் அமையவுள்ள மத்தியக் கட்டுப்பாட்டு அறை ஆகியவைகளுடன் இணைக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தை பல்லவன் போக்குவரத்து ஆலோசனை பணிக்குழு மூலம் செயல்படுத்திட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
இதற்காக பல்லவன் போக்குவரத்து ஆலோசனை பணிக்குழுவிற்கு 10 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை ஒப்பளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல் திட்டம்

0 comments


புதுடெல்லி,ஜூலை 25: மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கான சதித் திட்டம் நேபாளத்தில் தீட்டப்பட்டதை மத்திய புலனாய்வு அமைப்புகள் கண்டு பிடித்துள்ளன.
மும்பையில் கடந்த 13ம் தேதி 3 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 23 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கான சதித் திட்டத்தை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பும், பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யும் நேபாளத்தில் தீட்டியதை மத்திய புலனாய்வு அமைப்புகள் கண்டு பிடித்துள்ளன.
இது பற்றி விரிவான விசாரணை நடத்த, மத்திய புலனாய்வு அமைப்புகள், மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை அடங்கிய கூட்டுக்குழு நேபாளம் செல்ல உள்ளது.
குண்டு வெடிப்புக்கு முன்பு ஒரு வாரமாக நேபாளத்தில் இருந்து மும்பைக்கு சில குறிப்பிட்ட எண்களுக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. குண்டு வெடித்த பிறகும் இந்த எண்களுக்கு இடையே அதிகளவில் தொடர்பு இருந்துள்ளது. இவற்றை ஆய்வு செய்ததில் தான் சதித் திட்டம் அம்பலமாகி உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக நேபாளத்தில் சதித் திட்டம் தீட்டப்படுவது இது முதல் முறையல்ல. மும்பை தாதா கும்பல்களை சேர்ந்த பல ரவுடிகள் நேபாளத்தில் பதுங்கி உள்ளனர்.

 
Joses news © 2011